சென்னை – இன்று வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முழு கடை அடைப்பும் எதிர்ப்புப் பேரணிகளும் நடைபெறுவதால் இங்குள்ள 5,000-க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்களைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்றும், இயன்றவரையில், தங்கும் விடுதிகளிலும், மாணவர் விடுதிகளிலும், இல்லங்களுக்குள்ளேயும் இருக்க வேண்டும் என்றும் சென்னையிலுள்ள மலேசிய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதர் அகமட் ஃபாஜாராசாம் அப்துல் ஜலில், தான் நேரடியாக நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும், உள்நாட்டு நிலைவரங்களுக்கேற்பவும், உள்நாட்டு சட்ட திட்டங்களுக்கேற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தமிழகத்திலுள்ள மலேசியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையிலுள்ள மலேசியத் தூதரகம் அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அகமட் அறிவித்துள்ளார்.
உதவிகள் தேவைப்படும் மலேசியர்கள் கீழ்க்காணும் பிரத்தியேக அவசரத் தொலைபேசி எண்களில் சென்னையிலுள்ள மலேசியத் துணைத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.