Home Featured இந்தியா காஷ்மீர் உரி தாக்குதல்: சிகிச்சைப் பலனின்றி மேலும் 3 வீரர்கள் மரணம்!

காஷ்மீர் உரி தாக்குதல்: சிகிச்சைப் பலனின்றி மேலும் 3 வீரர்கள் மரணம்!

1195
0
SHARE
Ad

uri-attack

ஸ்ரீநகர் – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரி என்ற பகுதியில் அமைந்திருந்த இந்திய ராணுவ முகாம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 19 இராணுவ வீரர்களில், 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால், இக்கொடூரத் தாக்குதலில் பலியான இந்திய இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக இராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏற்கனவே 17 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் தொடுத்த பதிலடித் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.