Home Featured தமிழ் நாடு ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை – பிரான்ஸ் தமிழச்சி குற்றச்சாட்டு!

ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை – பிரான்ஸ் தமிழச்சி குற்றச்சாட்டு!

753
0
SHARE
Ad

ramkumar-swathi-murder-accusedசென்னை – சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், காவல்துறை ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தது முதல் அது குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டு வருபவர் பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்ற எழுத்தாளர்.

இந்நிலையில், ராம்குமார் நேற்று புழல் சிறையில் மின்சாரக் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியான சில நிமிடங்களில், அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில், அது காவல்துறையின் திட்டமிட்டக் கொலை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தகவலில்,

#TamilSchoolmychoice

“சுவாதி கொலை வழக்கில் பொய் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் இன்று 1 மணி நேரத்திற்கு முன்பு சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது காவல்துறை நடத்திய திட்டமிட்ட படுகொலை. நாளை ஜாமீன் மனு விசாரணையில் நிச்சயம் விடுதலை செய்யப்படுவான் என்ற தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததும் இல்லாமல் பெரியார் இயக்க தொண்டர் படையினர் 150 பேர்களுக்கு மேல் தயாராக ராம்குமாரை பாதுகாக்க போகிறார்கள் என்ற தகவல்களை முன்கூட்டியே கிடைத்ததால் அதன் ஆபத்தை உணர்ந்து கொண்டு காவல்துறை ராம்குமாரை கொன்றுவிட்டது.

ராம்குமார் வெளியே வந்தால் காவல்துறையினர் தான் தன் கழுத்தை அறுத்தது என்கிற உண்மையை அறிவித்து விடுவான் என்ற பதற்றமே காவல்துறை சாகடிக்க காரணமாகவும் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.