Home Featured நாடு 1.2 மில்லியன் மலேசியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை – ஆர்டிடி தகவல்!

1.2 மில்லியன் மலேசியர்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை – ஆர்டிடி தகவல்!

675
0
SHARE
Ad

driver-trainingகோலாலம்பூர் – ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருக்கும் சுமார்  1.2 மில்லியன் மலேசியர்களை, உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய வைக்க தேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (ஆர்டிடி) பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றது.

விண்ணப்பிக்கத் தகுதியிருந்தும் அவர்கள் ஏன் இன்னும் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கவில்லை என்பதை தாங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்டிடி-யின் பொது இயக்குநர் டத்தோ நட்ஸ்ரி சிரோன் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் வாகனம் ஓட்ட விரும்பவில்லையா? அல்லது அவர்களிடம் வாகனம் இல்லையா? அல்லது பொதுப்போக்குவரத்தை நம்பியிருக்கிறார்களா? என்பது ஆர்டிடி அறிந்து கொள்ள விரும்புகிறது” என்று நட்ஸ்ரி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice