Home Featured இந்தியா டெல்லியில் பயங்கரம்: பெண்ணை 30 முறை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

டெல்லியில் பயங்கரம்: பெண்ணை 30 முறை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

771
0
SHARE
Ad

stalker-stabs-woman_650x400_61474355903

புதுடெல்லி – இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், 21 வயதான இளம் பெண் ஒருவரை கிட்டத்தட்ட 30 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான் அவளது முன்னாள் காதலன்.

நேற்று செவ்வாய்க்கிழமை வடக்கு டெல்லியைச் சேர்ந்த புராரியில், இக்கொடூர கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

#TamilSchoolmychoice

கருணா (வயது 21) என்ற அந்த இளம்பெண் மோட்டாரில் சென்று கொண்டிருக்கும் போது, அவரைத் தடுத்து நிறுத்திய முன்னாள் காதலன் என்று சொல்லப்படும் சுரேந்தர் சிங், வெறித்தனமாக கருணாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இக்கொலை சம்பவம் குறித்து காவல்துறைத் தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில்,”கொலை செய்யப்பட்ட கருணா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே கருணாவை சுரேந்தர் சிங் பின் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து கருணாவின் குடும்பத்தார் 5 மாதங்களுக்கு முன்பே காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். எனினும் இரு குடும்பத்தாரும் காவல்நிலையத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து கொண்டனர்.இந்நிலையில் மீண்டும் சுரேந்தர் கருணவை பின் தொடர்ந்து அவரை கொலை செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் நடைபெற்ற போது அங்கிருந்த இரகசியக் கேமராவில் அக்காட்சிகள் பதிவாகியுள்ளன. அது தற்போது நட்பு ஊடகங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.