Home Featured தொழில் நுட்பம் அக்டோபர் 4-ம் தேதி கூகுள் திறன்பேசிகள் அறிமுகமாகலாம்!

அக்டோபர் 4-ம் தேதி கூகுள் திறன்பேசிகள் அறிமுகமாகலாம்!

819
0
SHARE
Ad

october-4கோலாலம்பூர் – கூகுள் தனது புதிய திறன்பேசிகளான பிக்சல் எக்ஸ் மற்றும் பிக்சல் எக்ஸ்எல் ஆகிய இரண்டையும் வரும் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், கூகுள் தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், செவ்வகம் ஒன்று அப்படியே சதுரமாக மாறி திறன்பேசியின் வடிவமாக மாறுவது போல் அமைத்து, “வாருங்கள் உங்களது அன்பைப் பெறுங்கள்” என்ற வாசகத்தோடு அக்டோபர் 4-ம் தேதியைக் குறிப்பிட்டுள்ளது.

இதனால் தொழில்நுட்ப ஆர்வலர்கள் வரும் அக்டோபர் 4-ம் தேதி, சான்பிரான்சிஸ் கோவில் நடைபெறவுள்ள கூகுள் மாநாட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

அம்மாநாட்டில் இந்தப் புதிய திறன்பேசிகள் அறிமுகமாகவுள்ளதாக முன்னணி தொழில்நுட்ப செய்தி இணையதளங்கள் கூறுகின்றன.