Home Featured நாடு ஜோகூரில் தாய், மகள் படுகொலை – 3 வயது குழந்தை தனித்து விடப்பட்டது!

ஜோகூரில் தாய், மகள் படுகொலை – 3 வயது குழந்தை தனித்து விடப்பட்டது!

1365
0
SHARE
Ad

Murder

ஜோகூர் பாரு – ஜோகூர் உலுதிராம் தாமான் புத்ரி வாங்சாவில் உள்ள வீடொன்றில் 56 வயதான தாயும், அவரது 16 வயது மகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

எம்.மரியாயீ (வயது 56), அவரது மகள் சி.துர்கா தேவி (வயது 16) ஆகிய இருவரும் உடம்பில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் பிணமாகக் கிடந்தனர்.

#TamilSchoolmychoice

ஜாலான் பெலாடுவில் உள்ள அந்த வீட்டில் இச்சம்பவம் நடந்துள்ளதை நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் அவரது குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.

இதனிடையே, அவர்கள் இருவரையும் கொலை செய்த கொலையாளி, மரியாயீயின் 3 வயது பேரக் குழந்தையை மட்டும் எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளான்.

அக்குழந்தை இறந்தவர்களுக்கு அருகில் அழுது கொண்டிருந்ததை அடுத்து, இக்கொடூர சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

இக்கொலைச் சம்பவம் பழிவாங்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கின்றது.