Home Featured நாடு காஜாங்கில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்!

காஜாங்கில் கடத்தப்பட்ட பள்ளி மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்!

641
0
SHARE
Ad

nurகாஜாங் – பண்டார் துன் ஹூசைன் ஆனில் இன்று வியாழக்கிழமை காலை கடத்தப்பட்ட மூன்றாம் படிவ மாணவியான நூர் டார்லீன் டாசீரா (வயது 15), இன்று பிற்பகல் 2.20 மணியளவில் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பு அம்மாணவி நடந்து வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே சென்றவரால் அடையாளம் காணப்பட்டு, மீட்கப்பட்டுள்ளார்.

ஜூலியானா ஜெப்ரி (வயது 42) என்பவர் தனது பிள்ளைகளை பள்ளியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்த போது, அவரது மகளது தோழிகளில் ஒருவர் நூர் டார்லீனை அடையாளம் கண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

உடனடியாக, காரை நிறுத்திய ஜூலியானா, நூர் டார்லீனை காரில் ஏற்றிக் கொண்டு அவரது இல்லத்தில் கொண்டு சேர்த்துள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் வீட்டின் முன்பு பள்ளி வாகனத்திற்காகக் காத்திருந்த போது, அவ்வழியே மோட்டாரில் வந்த இருவர் நூர் டார்லீனைக் கடத்திச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.