Home உலகம் புதிய போப் இன்று பொறுப்பேற்பு : வாட்டிகனில் கோலாகலம்

புதிய போப் இன்று பொறுப்பேற்பு : வாட்டிகனில் கோலாகலம்

563
0
SHARE
Ad

img1130319013_1_1வாடிகன்,மார்ச்.19- வாட்டிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில், பாரம்பரிய வழக்கப்படி முதலாம் பிரான்சிஸ் புதிய போப்பாக இன்று பொறுப்பேற்கிறார்.புதிய போப் இன்று பதவியேற்பதால் வாட்டிகனில் லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் குவிந்துள்ளனர்.

இந்த விழாவில் பெல்ஜியம், மொனாக்கோ அதிபர்கள் உள்பட 130 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

பதவியேற்புக்கான ஏற்பாடுகள் வாட்டிகனில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவுக்காக, வாட்டிகனில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் கண்ணைக் கவரும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

லட்சக்கணக்கானோர் வாட்டிகன் தெருக்களில் குவிந்துள்ளதால், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாட்டிகன் முழுவதும் மக்கள் வெள்ளம் திரண்டுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.