Home நாடு மங்கோலிய அழகி மரணத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை; ரோஸ்மா

மங்கோலிய அழகி மரணத்திற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை; ரோஸ்மா

655
0
SHARE
Ad

4கோலாலம்பூர், மார்ச்.19-  மங்கோலிய அழகி  அல்தான்  துயா மரணத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா தெரிவித்துள்ளார்.

தான் சற்று  பயந்த சுபாவம் உள்ளவர் என்பதோடு,  அல்தான்துயா கொல்லப்பட்ட  அன்று தான் கோலாலம்பூரில் இஸ்லாமிய ஆதரவற்றோர் நலன் சங்க  நிகழ்வில் கலந்து கொண்டிருந்தேன் என இன்று வெளியிடப்பட்ட தமது சுய சரிதையில் கூறியுள்ளார்.

அல்தான் துயா  கொலையில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக வலைப்பதிவாளர் ராஜா பெத்ரா கமாருதின் கூறிக் கொண்டுள்ளதை  ரோஸ்மா மான்சோர் மறுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

தமக்கு எதிராக கூறப்பட்ட ‘அவதூறு’ காரணமாக தாம் புக்கிட் அமானில் பல மணி நேரத்துக்கு விசாரிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.