Home இந்தியா திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூற முடியாது!- சோனியா காந்தி

திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்துக் கூற முடியாது!- சோனியா காந்தி

496
0
SHARE
Ad

soniaபுதுடெல்லி, மார்ச்.19- இந்திய மத்திய அரசில் இருந்தும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் திமுக வெளியேறியிருப்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று திமுகவின் விலகல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து இப்போதைக்கு கருத்து எதுவும் சொல்ல இயலாது என்று மட்டும் கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதில் பேசிய சோனியா காந்தி, இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைக்காக இந்தியா உறுதியான நிலைப்பாட்டுடன் எதிர்க்கும்.

இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் இன படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா ஆதரிக்கும் என தெரிவித்திருந்தார்.