Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா காய்ச்சல் குணமாகியது! இன்று இல்லம் திரும்பக் கூடும்!

ஜெயலலிதா காய்ச்சல் குணமாகியது! இன்று இல்லம் திரும்பக் கூடும்!

834
0
SHARE
Ad

jayalalitha3

சென்னை – அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் இருக்கின்றார் என்றும் அவருக்குக் கண்டிருந்த காய்ச்சல் முற்றிலும் நீங்கி விட்டது என்றும் மருத்துவமனை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது வழக்கமான உணவுகளை உட்கொண்டு வருகின்றார் என்றும் மருத்துவமனை குறிப்பு மேலும் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மருத்துவமனைக்கு வந்திருந்த மூத்த அதிமுக தலைவர்கள் பொன்னையன், பண்ருட்டி இராமச்சந்திரன் ஆகியோர் தாங்கள் ஜெயலலிதாவை நேரடியாகச் சந்தித்து நலம் விசாரித்ததாகவும், அவர் முழுமையான உடல் நலத்துடன் உள்ளார் என்றும் இன்றே இல்லம் திரும்பக் கூடும் என்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

jayalalitha-apollo-2nd-statement