Home Featured தமிழ் நாடு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது – கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்!

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது – கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம்!

561
0
SHARE
Ad

cauvery_waterபெங்களூரு – தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவு மற்றும் அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.

அதில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்றும், அணைகளில் உள்ள தண்ணீரை கர்நாடகா முழுவதும் குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், பெங்களூர், மைசூரின் குடிநீர் தேவைக்கு தான் அணைகளில் தண்ணீர் உள்ளது என்றும் அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.