Home Featured கலையுலகம் அரவிந்த்சாமி, திரிஷா நடிப்பில் சதுரங்கவேட்டை 2!

அரவிந்த்சாமி, திரிஷா நடிப்பில் சதுரங்கவேட்டை 2!

656
0
SHARE
Ad

arvinthswamyகோலாலம்பூர் – மனோபாலா தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் நடராஜன் கதாநாயகனாக நடித்த, ‘சதுரங்கவேட்டை’ திரைப்படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றதைத் தொடர்ந்து ‘சதுரங்கவேட்டை 2’ என்ற பெயரில் இன்னொரு திரைப்படத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளது தயாரிப்புக்குழு.

ஆனால், இம்முறை அரவிந்த்சாமி, திரிஷா நடிப்பில் மிகப் பிரம்மாண்டமான முறையில், படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய வினோத்தே, ‘சதுரங்கவேட்டை 2’ படத்தின் கதை திரைக்கதை வசனத்தை எழுதுகிறார்.

#TamilSchoolmychoice

‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.