கோலாலம்பூர் – கடந்த 2003-ம் ஆண்டு, ஐடி ஆய்வாளர் கேனி ஆங் லே கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட, முன்னாள் விமான துப்புறவாளர் அகமட் நஜிப் அரிசுக்கு இன்று காஜாங் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உத்துசான் தெரிவித்துள்ளது.
அவரது உடல் காஜாங் மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள இஸ்லாம் கல்லறையில் தகனம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து அகமட் நஜிப்பின் குடும்பத்தினருக்கு இப்போது தான் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அகமட் நஜிப்பின் தாயார் வீட்டில் படுத்தபடுக்கையாக இருப்பதால், அவரால் சிறைக்குச் செல்ல முடியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
29 வயதான கேனி ஆங்கை, 40 வயதான அகமட் நஜிப் தான் கொலை செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் இருப்பதாகக் கூறி கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, கூட்டரசு நீதிமன்றம் அவரது தண்டனை மறுஆய்வு மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.