Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா உடல்நலம் பெற கருணாநிதி வாழ்த்து!

ஜெயலலிதா உடல்நலம் பெற கருணாநிதி வாழ்த்து!

805
0
SHARE
Ad

karunanidhi-jayalalithaசென்னை – உடல்நலக் குறைவு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பெற திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சற்று முன்பு அவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.”

“முதல் அமைச்சர், ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி பல்வேறு விதமான செய்திகள் வந்து கொண்டே உள்ளன. முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது கொள்கை அளவில் நான் வேறுபட்டாலும், அவர்கள் விரைவில் உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சற்று முன்பு தான், “ஜெயலலிதா உடல் நலம் – திமுக தரப்பில் மௌனம் காக்கும் கண்ணியக் குறைவு!” என்ற தலைப்பில் செல்லியலில் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.