Home Featured நாடு ‘டத்தோஸ்ரீ’ வீட்டில் கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்!

‘டத்தோஸ்ரீ’ வீட்டில் கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்!

704
0
SHARE
Ad

PDRMகோலாலம்பூர் – டத்தோஸ்ரீ ஒருவரின் வீட்டில் இருந்து ஆயுதங்களும், கஞ்சா செடிகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

வாங்சா மாஜூவிலுள்ள அவரது பங்களாவில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட திடீர் சோதனையில், காவல்துறைப் பயன்படுத்தும் மேல் அங்கி, பிஸ்டோல், சாமுராய் வாள்கள், பாராங் இரக ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இரவு 8 மணியளவில் நடத்தப்பட்ட சோதனையில் டத்தோஸ்ரீ-யின் மகனும், அவரது இரு நண்பர்களும் வீட்டில் இருந்துள்ளனர். அவர்களைக் காவல்துறைக் கைது செய்துள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது இந்த விவகாரத்தை விசாரணை செய்து வரும் காவல்துறை, கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், காவல்துறையினர் போல் நடித்து வந்துள்ளார்களா?, வேறு ஏதேனும் இரகசியக் கும்பல்களுடன் தொடர்பு உள்ளதா? உள்ளிட்டவைகளை விசாரணை செய்து வருகின்றது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் பேசியுள்ள டத்தோஸ்ரீ, தனது வீட்டில் ஆயுதங்கள், கஞ்சா செடிகள் இருந்தது பற்றித் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றது.