Home Featured கலையுலகம் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி!

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி!

966
0
SHARE
Ad

jamesசென்னை – ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்குகிறார்.

பல நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடும் நண்பர்கள் தங்களது வாழ்வின் மகிழ்ச்சி, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளுவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

அதில் சிறப்பு என்னவென்றால், மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஊர்வசி நடித்திருந்த திருபுரசுந்தரி கதாப்பாத்திரம் , சிந்து பைரவி படத்தில் சுஹாசினி நடித்திருந்த சிந்து கதாப்பாத்திரம், மன்னன் படத்தில் குஷ்பு நடித்திருந்த மீனா கதாப்பாத்திரம், ரெட்டை வால் குருவி படத்தில் ராதிகா நடித்திருந்த கவிதா கதாப்பாத்திரம் ஆகியவை அப்படியே இத்திரைப்படத்தில் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

படப்பிடிப்பு வேலைகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.