Home Featured நாடு ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிரான இந்தியாவின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது – ஐஜிபி தகவல்!

ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிரான இந்தியாவின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது – ஐஜிபி தகவல்!

1260
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் மலேசியத் தொழிலதிபரான ஆனந்தகிருஷ்ணன், அஸ்ட்ரோ ஆல் ஆசியாவின் துணை நிர்வாகி  ரால்ஃப் மாஷல் ஆகிய இருவரையும் கைது செய்ய இந்தியா  கைது ஆணை (பிடிவாரண்ட்) பிறப்பித்தாலும் கூட, நாடுகடத்துவதற்கான உத்தரவு இல்லாமல், மலேசியக் காவல்துறை அதை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் கைது ஆணையை வைத்து மலேசியாவில் நடவடிக்கை எடுக்க முடியாது. அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மூலமாக இருதரப்பு சட்ட உதவியோடு, நாடுகடத்துவதற்கான அனுமதிக்காக இந்தியா விண்ணப்பிக்க வேண்டும்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.