Home Featured உலகம் அமெரிக்க வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிக முக்கியமானது – டிரம்ப் புகழாரம்!

அமெரிக்க வளர்ச்சியில் இந்துக்களின் பங்கு மிக முக்கியமானது – டிரம்ப் புகழாரம்!

910
0
SHARE
Ad

Trumpநியூயார்க் – உலக அளவில் நாகரிக வளர்ச்சியிலும், அமெரிக்கக் கலாச்சாரத்திலும் இந்து சமூகத்தினரின் பங்கு மிக முக்கியமானது என  குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் புகழ்ந்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிங்டனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க குடியுரிமையும், ஓட்டுரிமையும் பெற்ற இந்தியர்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த இருவருமே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களைக் கவரும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி, நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில்,  10 ஆயிரத்திற்கும் அதிகமான, அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து டிரம்ப் தெரிவித்துள்ள கருத்தில், “அமெரிக்கா, உலக கலாசார மற்றும் நாகரிக வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது.”

“குடும்ப வாழ்க்கை முறை, ஒழுக்கம், கடின உழைப்பு, முன்னேற்றம் போன்றவற்றின் மூலம், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு, இங்கு வசிக்கும் இந்துக்கள் பெரும் பங்காற்றி உள்ளனர்.”

“அமெரிக்காவின் வளர்ச்சியில், இந்தியர்களின் பங்களிப்பை புறக்கணிக்க முடியாது. அவர்கள் மத்தியில் உரையாற்றும் நாளை எண்ணி, ஆவலுடன் காத்திருக்கிறேன்.”

“நியூஜெர்சியில் நடக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், அனைவரும் பங்கேற்க வேண்டும். அமெரிக்காவை மேலும் வளமானதாக்க, தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.