Home Featured நாடு பேஸ்புக்கில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தவர் கைது!

பேஸ்புக்கில் ஜோகூர் அரச குடும்பத்தை அவமதித்தவர் கைது!

739
0
SHARE
Ad

facebook-arrest24-600கோலாலம்பூர் – ஜோகூர் அரச குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்த 25 இளைஞரை, கோலாலம்பூரில் இன்று செவ்வாய்க்கிழமை காவல்துறை கைது செய்துள்ளது.

பத்து காஜாவைச் சேர்ந்த அவரைக் கைது செய்துள்ள காவல்துறை, ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அழைத்துச் சென்றுள்ளது.

இது குறித்து ஜோகூர் காவல்துறைத் தலைவர் வான் அகமட் நஜ்முடின் மொகமட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அவர் அரச குடும்பத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தாரா?  இல்லையா? என்பது முக்கியமல்ல. காவல்துறைக்குப் புகார் வந்துள்ளது. அதனால் அவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றார்” என்று வான் அகமட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice