Home Featured நாடு அபு சயாப்பைச் சேர்ந்த இருவர் பிலிப்பைன்ஸ் படையால் கொல்லப்பட்டனர்!

அபு சயாப்பைச் சேர்ந்த இருவர் பிலிப்பைன்ஸ் படையால் கொல்லப்பட்டனர்!

683
0
SHARE
Ad

Abu sayyafகோத்தா கினபாலு – சபா கடற்பகுதியில் நடத்தப்பட்ட பல மனிதக் கடத்தல் சம்பவத்திற்குப் பின்புலமாக இருந்த அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு, “முக்தாடில் சகோதரர்கள்” இன்று செவ்வாய்க்கிழமை சுலு அருகே பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுலுவில், பாத்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் அவர்கள் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினரால் வளைக்கப்பட்ட போது, நிக்சன் மற்றும் பிரவுன் ஆகிய இருவரும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினர் அவர்கள் இருவரையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice