Home Featured நாடு குவாந்தான் விபத்து: மோட்டார்விளையாட்டுப் பந்தயங்கள் தற்காலிக நிறுத்தம்!

குவாந்தான் விபத்து: மோட்டார்விளையாட்டுப் பந்தயங்கள் தற்காலிக நிறுத்தம்!

786
0
SHARE
Ad

go_kart_tragedy_bernama_620_317_100

கோலாலம்பூர் – மலேசிய ஆட்டோமொபைல் சங்கம் (Automobile Association of Malaysia) நடத்தும் மோட்டார் விளையாட்டுப் பந்தயங்களைத் தற்காலிகமாக நிறுத்த மலேசிய மோட்டார் விளையாட்டுச் சங்கம் முடிவெடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கோ-கார்ட் என்ற சிறிய இரக கார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதனை மலேசிய மோட்டார் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் துங்கு முட்சஃபார் துங்கு முஸ்தபா உறுதிப்படுத்தியுள்ளார்.