Home Featured இந்தியா பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா அதிரடித் தாக்குதல்! 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி!

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா அதிரடித் தாக்குதல்! 2 பாகிஸ்தான் வீரர்கள் பலி!

1065
0
SHARE
Ad

ind-pakபுதுடெல்லி – எல்லையில், காரணமேயின்றி போர்நிறுத்த கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட பாகிஸ்தானுக்கு, இந்தியா தண்டனையாகத் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு, பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களில், இந்தியா நடத்திய அதிரடித் தாக்குதலில் தீவிரவாதிகள் பலரும், அவர்களுக்குப் பயிற்சியளித்து வந்த, பாகிஸ்தான் இராணுவ வீரர்களில் இருவரும் கொல்லப்பட்டனர்.

முன்னதாக, காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே, பாகிஸ்தான் படைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதோடு, கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

நௌகம் பகுதியில், இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த இந்தியப் போர் விமானங்கள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளன.

இது குறித்து டிஜிஎம்ஓ லெப்டினேட் ஜெனரல் ரன்பீர் சிங் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “எல்லைக் கோட்டில், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள பகுதியில், இந்திய இராணுவம் அறுவை சிகிச்சைத் தாக்குதலை நடத்தியதில், கணிசமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

உரி தாக்குதல் எதிரொலி 

அண்மையில், காஷ்மீர் மாநிலம், உரியில், அதிகாலை வேளையில் உறங்கிக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய இராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தீவிரம் காட்டி வந்த இந்தியா, சார்க் மாநாட்டை புறக்கணித்தது. அடுத்ததாக, எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதிகளை உளவு பார்த்து வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு அதிரடியாகத் தாக்குதலை நடத்தியுள்ளது.

மேலும், தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடந்த இந்தியப் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள மோடி அரசு, இன்று மாலை இந்திய நேரப்படி நான்கு மணிக்கு கூடி ஆலோசிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.