Home Featured நாடு எம்எச்17 பேரிடர்: டச்சு விசாரணை முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு!

எம்எச்17 பேரிடர்: டச்சு விசாரணை முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு!

852
0
SHARE
Ad

MH17வாஷிங்டன் – கடந்த 2014-ம் ஆண்டு, கிழக்கு உக்ரைன் அருகே, மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், தற்போது டச்சு விசாரணை அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் விசாரணை முடிவுகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இது குறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், “ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைன் பகுதியில், இருந்து தான் எம்எச்17 விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரியவந்துள்ளது”

“அதேவேளையில், கூட்டு விசாரணைக் குழுவின் ஆய்வு முடிவுகளின் படி, ரஷியாவில் இருந்து தான் அந்த ஏவுகணை உக்ரைனுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதையும், தாக்குதல் நடந்த பின்னர் அது ரஷியாவிற்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் அறிகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.