Home Featured கலையுலகம் கிம் கர்டாஷியன் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டார்!

கிம் கர்டாஷியன் துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டார்!

1066
0
SHARE
Ad

kim-kardashian-bathing-suit-after-babyபாரிஸ் – கவர்ச்சிக்குப் பெயர் போன பிரபல அமெரிக்க நட்சத்திரமான கிம் கர்டாஷியன் பாரிசிலுள்ள தங்கும்விடுதி ஒன்றில், போலீஸ் உடையணிந்த இருவரால், துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை அவரது அறைக்குள் நுழைந்த முகமூடி அணிந்த இருவர், அவரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து சிஎன்என் வெளியிட்டுள்ள தகவலில், “அவர் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார். என்றாலும் அவருக்கு எந்த ஒரு துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், அவரை சிறை பிடித்தவர்கள் யார்? கொள்ளையர்களா? போன்ற விவரங்கள் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

பாரிஸ் நகரில் நடக்கும் ஆடை அலங்கார நிகழ்வில் கலந்து கொள்ள கிம் கடந்த புதன்கிழமை முதல் அங்கிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.