Home Featured தமிழ் நாடு ஜெயலலிதா உடல்நிலையை அறிய அப்போலோ சென்ற திருமாவளவன்!

ஜெயலலிதா உடல்நிலையை அறிய அப்போலோ சென்ற திருமாவளவன்!

643
0
SHARE
Ad

Thirumavalavanசென்னை – தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் திருப்தியடையாத விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திங்கட்கிழமை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றார்.

அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் 2-வது மாடிக்கு சென்ற அவர், அங்கு அதிமுக தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் வெளியில் வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி பல்வேறு தகவல்கள் வதந்தியாக பரவியுள்ளது. எனவே அவர் உடல்நிலை பற்றி அரசு சார்பில் அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன். அதன்  தொடர்ச்சியாக முதலமைச்சரை நேரில் சந்திக்க இன்று நான் மருத் துவமனைக்கு வந்தேன்.”

#TamilSchoolmychoice

“முதலமைச்சர் சிகிச்சை பெறும் 2-வது மாடிக்கு நான் சென்றேன். அங்கு எந்த கெடுபிடியும் இல்லை. அங்கு அதிமுக மூத்த தலைவர்கள் இருந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னால் நேரில் சந்திக்க இயலவில்லை. என்றாலும் அங்கிருந்த அதிமுக தலைவர்களுடன் சந்தித்து பேச முடிந்தது. அவர்களிடம் முதல்வரின் உடல் நலம் பற்றி விசாரித்தேன்.”

“முதலமைச்சர் ஜெயலலிதா நன்றாக குணம் அடைந்து வருவதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் என்னிடம் உறுதிபட தெரிவித்தனர். அவர் விரைவில் குணம் அடைய விடுதலை சிறுத்தைகள் சார்பில் மீண் டும் வாழ்த்துகிறேன்.”

“நான் இங்கு வந்ததில் வேறு எந்த குறிக்கோளும் இல்லை.கருணாநிதி, மூப்பனார் மருத்துவமனைகளில் இருந்தபோது நேரில் சென்று உடல்நலம் விசாரித்துள்ளேன். அது போல இன்றும் நம் முதல்வரை காண வந்தேன்” – இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.