Home Featured நாடு மலேசியக் கொடியை அவமதித்த 9 ஆஸ்திரேலியர்கள் கைது!

மலேசியக் கொடியை அவமதித்த 9 ஆஸ்திரேலியர்கள் கைது!

660
0
SHARE
Ad

aussie_undies-transformedசிப்பாங் – சிப்பாங் அனைத்துலக சுற்றில் (Sepang International Circuit) நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் பந்தயத்தின் போது, மலேசியக் கொடியை உள்ளாடையாக அணிந்து, அநாகரீகமாக நடந்து கொண்ட 9 ஆஸ்திரேலியர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் அவர்கள் கைது செய்யப்பட்ட போது, 25-லிருந்து 29 வயதுடைய அந்த 9 பேரும், குடிபோதையில் இருந்ததாக சிப்பாங் ஓசிபிடி துணை ஆணையர் அப்துல் அஜிஸ் அலி தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice