Home Featured உலகம் பௌதிகத்துக்கான நோபல் பரிசை மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்!

பௌதிகத்துக்கான நோபல் பரிசை மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்!

734
0
SHARE
Ad

ஸ்டோக்ஹோம் – இந்த ஆண்டுக்கான பௌதிகத்துக்கான நோபல் பரிசை டேவிட் ஜே தௌல்ஸ், டங்கன் ஹால்டேன் மற்றும் மைக்கல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூவர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இதற்கான அறிவிப்பை நோபல் பரிசுக்கான குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.

பௌதிகத்துக்கான பரிசு பெற்றவர்களில் டேவிட் ஜே தௌல்ஸ், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆவார்.

#TamilSchoolmychoice

nobel-physics-duncan-haldane

டங்கன் ஹால்டேன் (படம்), அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆவார்.

மூன்றாமவரான மைக்கல் கோஸ்டர்லிட்ஸ் அமெரிக்காவின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

நேற்று திங்கட்கிழமை மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஜப்பானியரான யோஷிநோரி ஓசுமிக்கு வழங்கப்பட்டது.