Home Featured நாடு பெர்சே-5 பேரணியில் இணைகிறது பெர்சாத்து கட்சி!

பெர்சே-5 பேரணியில் இணைகிறது பெர்சாத்து கட்சி!

979
0
SHARE
Ad

MUHYIDDIN_PPAUH (1)

கோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே -5 பேரணியில் கலந்து கொள்வதாக மகாதீர்-மொகிதின் தலைமையிலான பெர்சாத்து கட்சி அறிவித்துள்ளது.

இதன்மூலம், பெர்சே பேரணிக்கு கூடுதல் சக்தியும், மக்கள் ஈர்ப்பும் கிடைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

“நஜிப் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கை, ஊழலற்ற அரசாங்கம் என்ற பெர்சே பேரணியின் நோக்கமும், குறிக்கோள்களும், பெர்சாத்து கட்சியின் இலக்குகளோடு ஒத்திருப்பதால், அந்தப் பேரணியில் பங்கு பெறுவதில் தடையேதும் இல்லை” என பெர்சாத்து கட்சியின் தலைவர் மொகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

“பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் போக்கு – இவை இல்லாவிட்டால் நாங்கள் கலந்து கொள்வதில் பிரச்சனை ஏதுமில்லை. மக்களின் செய்தியை எடுத்துக் காட்டுவதுதான் முக்கியம்” என்றும் மொகிதின் கூறியுள்ளார்.