Home Featured வணிகம் தனித்துவமான கார் பதிவு எண்ணை வாங்க 9 மில்லியன் டாலர் செலவு செய்த இந்தியர்!

தனித்துவமான கார் பதிவு எண்ணை வாங்க 9 மில்லியன் டாலர் செலவு செய்த இந்தியர்!

1283
0
SHARE
Ad

dubaiதுபாய் – துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர், ஒரே ஒரு எண் கொண்ட தனித்துவமான கார் பதிவு எண்ணை (car registration plate) வாங்க 9 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்துள்ளார்.

துபாயில் நில மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் பல்விண்டர் சஹானி என்ற அவர், துபாய் சாலைப் போக்குவரத்துத் துறை நடத்திய ஏலத்தில் பங்கேற்று, “டி5” என்ற கார் பதிவு எண் தட்டை துபாய் மதிப்பில் 33 மில்லியன் ஏஇடி (அமெரிக்க மதிப்பில் 9 மில்லியன் டாலர்) செலவு செய்து வாங்கியுள்ளார்.

இதுவரை இது போல் 10 நம்பர் பிளேட்டுகளைத் தான் வாங்கியிருப்பதாகவும், இன்னும் நிறைய நம்பர் பிளேட் வாங்க வேண்டும் என்பதே தனது கனவு என்றும் தெரிவித்துள்ள அவர், இந்த புதிய நம்பரை தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்குப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice