கோலாலம்பூர் – சிவப்புச் சட்டை அமைப்பின் தலைவரும், சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவருமான டத்தோஸ்ரீ ஜமால் யூனோஸ், இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்படவுள்ளார்.
வெளிநாடு சென்றுவிட்டு இன்று புதன்கிழமை காலை நாடு திரும்பிய அவரை, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து காவல்துறை கைது செய்தது.
அவர் மீது பல காவல்துறைப் புகார்கள் வந்துள்ளதையடுத்து இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜமாலின் சட்ட ஆலோசகர் மொகமட் இம்ரான் தாமரின் தெரிவித்துள்ளார்.
அவதூறு மற்றும் கொலை மிரட்டல் ஆகியவற்றுக்கான குற்றவியல் சட்டப்பிரிவு 500 மற்றும் 503 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 சட்டப்பிரிவு 233 மற்றும் தேசநிந்தனைச் சட்டம் பிரிவு 4(1) ஆகியவற்றின் கீழ் ஜமால் விசாரணை செய்யப்படுவார் என்றும் இம்ரான் தாம்ரின் தெரிவித்துள்ளார்.
தற்போது ஜமால் டாங் வாங்கி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.