Home Featured கலையுலகம் ரொமோ பார்த்துவிட்டு போனில் அழைத்து ரஜினி பாராட்டு!

ரொமோ பார்த்துவிட்டு போனில் அழைத்து ரஜினி பாராட்டு!

1428
0
SHARE
Ad

sivaசென்னை – ரெமோ திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயனையும், அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவையும் போனில் அழைத்து தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆர்.டி.ராஜா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “ரெமோ பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னையும், சிவகார்த்திகேயனையும் போனில் அழைத்துப் பாராட்டினார். அவருக்கு ரெமோ மிகவும் பிடித்துள்ளது. வெகுவாகப் பாராட்டினார். ரஜினி சாரின் தீவிர ரசிகனான எனக்கு அவரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்துள்ளது எனது வாழ்நாளில் கிடைத்த மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கிறேன். மிக்க நன்றி சார்” என்று தெரிவித்துள்ளார்.