Home Featured நாடு பிரதமரின் வரவு செலவுத் திட்டம்: உரையின் முக்கிய அம்சங்கள்! (தொகுப்பு – 1)

பிரதமரின் வரவு செலவுத் திட்டம்: உரையின் முக்கிய அம்சங்கள்! (தொகுப்பு – 1)

907
0
SHARE
Ad

najib-budget-speech

கோலாலம்பூர் – பிரதமரும், நிதி  அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில், 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்  பின்வருமாறு:-

  • 1959-ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட நாட்டின் முதல் வரவு செலவுத் திட்டம் மொத்தம் 888 மில்லியன் ரிங்கிட்டைக் கொண்டிருந்தது. அதன் பின்னர் நாடு பன்மடங்கு வளர்ச்சியடைந்து இந்த முறை, 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்,  260.8 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டைக் கொண்டிருக்கின்றது.
  • ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி ஒரு சிலர் கூறி வருவது போல் உயர்த்தப்படாது.
#TamilSchoolmychoice

najib-budget-last-minute-preparations

வரவு செலவுத் திட்டம் மீதான உரையாற்றுவதற்கு முன்பாக இறுதி நேர முன்னேற்பாடுகளை கவனிக்கும்  நஜிப்…

  • 1.6 மில்லியனாக இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசாங்க ஊழியர்களுக்கான சலுகைகள்

  • அவர்களுக்கு உயர்கல்வி பயில விரும்பினால், முழு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.
  • பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது பிள்ளைகள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டாலோ, 5 நாட்களுக்கு அரசாங்க ஊழியர்களுக்கு பதிவு செய்யப்படாத விடுமுறை வழங்கப்படும்.
  • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திறன்பேசிகள் (ஸ்மார்ட்போன்) வாங்குவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கு 5,000 ரிங்கிட் கடனுதவி வழங்கப்படும்.
  • அரசு ஊழியர்கள் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கான கடனுதவி 5,000 ரிங்கிட்டிலிருந்து 10,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகின்றது.
  • தற்போது 120,000 ரிங்கிட்டாக இருக்கும் குறைந்த பட்ச வீட்டுக் கடன் 2 இலட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்படுகின்றது. தற்போது வழங்கப்பட்டு வரும் அதிக பட்ச வீட்டுக் கடனான 6 இலட்சம் ரிங்கிட், இனி 750,000 ரிங்கிட்டாக உயர்த்தப்படுகின்றது.
  • அரசு ஊழியர்களுக்காக மேலும் 30,000 வீடுகள் 1மலேசியா பொதுச் சேவை வீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்படும். 90,000 முதல் 300,000 வரையிலான விலையில் இந்த வீடுகள் விற்கப்படும்.

(மேலும் அறிவிப்புகள் தொடரும்)