Home Featured நாடு வரவு செலவுத் திட்டம் 2017: பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுகின்றது!

வரவு செலவுத் திட்டம் 2017: பிரிம் உதவித் தொகை உயர்த்தப்படுகின்றது!

972
0
SHARE
Ad

brim

கோலாலம்பூர் – பலர் குறை கூறினாலும், பிரிம் உதவித் தொகையைத் தான் தொடர்ந்து வழங்கப் போவதாகவும், அதைவிட முக்கியமாக தற்போது வழங்கப்படும் தொகையை உயர்த்தப்போவதாகவும் பிரதமர் நஜிப், இன்று வெள்ளிக்கிழமை 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது தனது உரையில் தெரிவித்தார்.

“ஒரு நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டபோது, ஓர் இந்திய மாது என்னை அணுகி, எனது கரங்களைப் பற்றிக் கொண்டு, ‘டத்தோ நஜிப், மற்றவர்கள் என்ன கூறினாலும் பரவாயில்லை. எனக்கு பிரிம் உதவித் தொகை பெரிதும் உதவுகின்றது’ என்று தனக்குத் தெரிந்த மலாய் மொழியில் கூறினார். எனவேதான் பிரிம் உதவித் தொகை தொடர்கின்றது” என நஜிப் தனது உரையில் கூறினார்.

#TamilSchoolmychoice

3,000 ரிங்கிட் வருமானம் கொண்ட குடும்பங்கள் இனி 1,200 ரிங்கிட் பிரிம் உதவித் தொகையாகப் பெறுவார்கள் என்றும் நஜிப் அறிவித்தார்.

பிரிம் உதவித் தொகைக்காக, இந்த வரவு செலவுத் திட்டத்தில், 6.8 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

(மேலும் அறிவிப்புகள் தொடரும்)