Home Featured நாடு கொள்ளை சம்பவம் ஒன்றில் ‘கபாலி’ துணை நடிகர்கள் இருவர் கைது!

கொள்ளை சம்பவம் ஒன்றில் ‘கபாலி’ துணை நடிகர்கள் இருவர் கைது!

821
0
SHARE
Ad

kabali_கோலாலம்பூர் – கபாலி திரைப்படத்தில் துணை நடிகர்களாக நடித்த இருவர் உட்பட மூன்று பேர் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் சந்தேகத்தின் பேரின் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 13-ம் தேதி, மதியம் 12.30 மணியளவில், ஷா ஆலம், செக்‌ஷன் 19-ல் இயங்கி வரும் குண்டர் கும்பலைச் சேர்ந்த அந்த இருவரை காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக ஷா ஆலம் ஓசிபிடி துணை ஆணையர் ஷாபியென் மாமட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

களவு போன நகையின் அடகுக்கடை ரசீது அவர்கள் இருவரிடம் இருந்ததாகவும், விசாரணைக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் பூச்சோங் மற்றும் சன்வேயில் உள்ள அக்கடைகளில் இருந்து அந்நகைகளை மீட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த இரு குண்டர் கும்பல் உறுப்பினர்களும், வயது 34 மற்றும் 31 வயதுடையவர்கள் என்றும், ஜோடிகளான அவர்கள் இருவரும் கபாலி உட்பட திரைப்படங்களில் துணை நடிகர்களாக நடித்தவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதோடு, அவர்கள் இருவரும் போதை மருந்து பயன்படுத்தி இருப்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக துணை ஆணையர் சைஃபியென் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த கொள்ளையில் தொடர்புடையதாக நம்பப்படும் அந்த குண்டர் கும்பலைச் சேர்ந்த 40 வயதான இந்தோனிசியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.