Home Featured நாடு 10 அழகுப் பொருட்களில் விஷத்தன்மை – சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்!

10 அழகுப் பொருட்களில் விஷத்தன்மை – சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியல்!

1101
0
SHARE
Ad

cosmeticகோலாலம்பூர் – விஷத்தன்மை கொண்ட 10 அழகுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டுள்ள சுகாதாரத்துறை அவற்றை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பட்டியலிடப்பட்டுள்ள அந்த 10 அழகுப் பொருட்களில் ( Melan: Off Intensive Mask, Melan: Off Cream, Afrina Night Cream, Afrina Daily Cream, Kemboja Herbal Cream, Day Pinky Cream, Night Glow Cream, Debella Nadien Glow Night Cream, Mekar Semilu Face Scrub, Mutiara Beauty Collection and Mekar Semilu Cream Mekarsutra) அசெலாயிக் அமிலம், ஹைட்ரோகுய்னன், டிரெடினாயின் மற்றும் கனமான உலோக மெர்குரி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice

மேலும், அப்பொருட்கள் இனி மலேசியாவில் விற்பனையில் இருக்காது என்றும் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் நூர் குறிப்பிட்டுள்ளார்.