Home Featured தமிழ் நாடு 2-வது முறையாக தமிழக ஆளுநர் ஜெயலலிதாவைக் காண அப்போல்லோ வருகை

2-வது முறையாக தமிழக ஆளுநர் ஜெயலலிதாவைக் காண அப்போல்லோ வருகை

687
0
SHARE
Ad

vidyasegar-rao

சென்னை – அப்போல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைக் கண்டு உடல் நலம் விசாரிக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மீண்டும் அப்போல்லோவுக்கு வருகை தந்தார்.

அவருக்கு விளக்கம் தந்த அப்போல்லோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் மருத்துவர் குழுவினர், தமிழக முதல்வர் சிறந்த முறையில் சிகிச்சைக்குப் பின்னர் தேறி வருவதாகத் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அறைக்கு (வார்டு) சென்று அவரை தமிழக ஆளுநர் பார்த்ததாக, பின்னர் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

முதல்வருக்கு சிறந்த முறையில் சிகிச்சையும், கண்காணிப்பும் வழங்கி வரும் அப்போல்லோ மருத்துவர் குழுவுக்கு, தமிழக ஆளுநர் நன்றி தெரிவித்துக் கொண்டதாகவும் ஆளுநர் மாளிகையின் அறிக்கை தெரிவித்தது.

தமிழக ஆளுநரின் வருகையின் போது தமிழக அமைச்சர்களும், மக்களவை துணை சபாநாயகர் டாக்டர் தம்பிதுரையும் உடனிருந்ததாகவும் தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் முழு வடிவத்தை கீழே காணலாம்:-

jayalalitha-health-statement-governor-palace