Home Featured கலையுலகம் தீபாவளி கொண்டாட அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி!

தீபாவளி கொண்டாட அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி!

586
0
SHARE
Ad

Rajnikanth Linga Audio Launch

சென்னை – கடந்த இரண்டு வாரங்களாக  அமெரிக்காவில் இருந்து வந்த நடிகர் ரஜினி காந்த், குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, இன்று காலை சென்னை திரும்பியுள்ளார்.

அவர் மருத்துவ பரிசோதனைகளுக்காகவும், எந்திரன் இரண்டாம் பாக பட வேலைகள் காரணமாகவும் அமெரிக்காவில் இருந்ததாக கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அவர் அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்தடைந்த ரஜினிகாந்த், அங்கிருந்த குடி நுழைவுத் துறை, சுங்கத் துறை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ரஜினியை திடீரென விமான நிலைய வளாகத்தில் கண்ட இரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து விட்டு தனது இல்லம் புறப்பட்டுச் சென்றுள்ளார் ரஜினி.