Home Featured வணிகம் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு!

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு!

776
0
SHARE
Ad

Petrol Pumpsகோலாலம்பூர்  – இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப் பட்டியலின் படி, ரோன்95 எண்ணை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 1.95 ரிங்கிட்டும் (முந்தைய விலை 1.80 ரிங்கிட்) , ரோன்97 எண்ணெய் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 2.30 ரிங்கிட்டும் (முந்தைய விலை 2.15 ரிங்கிட்), டீசலின் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து 1.90 ரிங்கிட்டும் (முந்தைய விலை 1.75 ரிங்கிட்) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இப்புதிய விலை இன்று நள்ளிரவு நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மலேசிய பெட்ரோல் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் நோர் மன்சோர் அப்துல் காஃபர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice