Home Featured உலகம் வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டம்!

வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டம்!

1054
0
SHARE
Ad

obama-deepavaliவாஷிங்டன் – அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில், உயர் பதவிகளில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகாரிகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

தீபாவளி விளக்கு ஏற்றிய ஒபாமா உலகமெங்கிலும் வாழும் இந்துக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளிக் கொண்டாட்டத்தை துவக்கி வைத்த முதல் அதிபர் தான் என்றும் ஒபாமா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதோடு, தானும், தனது மனைவி மிச்சேலும் தீபாவளிப் பண்டிகைக்காக மும்பை சென்ற போது, இந்திய மக்கள் ஆடல், பாடலுடன் வரவேற்பு அளித்ததை தாங்கள் மறக்க முடியாது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார்.