Home Featured வணிகம் பேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது!

பேராக்கின் 30 ஆண்டுகள் பழமைவாய்ந்த ‘மெக் டொனால்டு’ கடை மூடப்படுகின்றது!

1005
0
SHARE
Ad

main_bl_0111_p014a_boblee_1ஈப்போ – பேராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வந்த முதல் மற்றும் மிகப் பழமையான மெக் டொனால்டு கடை இந்த மாத இறுதியோடு அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1980-ம் ஆண்டு, ஜாலான் முஸ்தபா அல் பக்ரியில் துவங்கப்பட்ட அக்கடை வரும் நவம்பர் 30-ம் தேதியோடு, அதன் சேவையை நிறுத்திக் கொள்ளவுள்ளது.

இது குறித்து அக்கடையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், ‘தி ஸ்டார்’ இணையதளத்திடம் கூறியுள்ள தகவலில், “எங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இது குறித்துப் பேச சந்திப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மற்ற கடைகளுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

எனினும், கடை மூடப்படுவதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.