Home Featured வணிகம் இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை – மார்ச் வரையில் முற்றிலும் இலவசம்!

இந்தியாவில் ஜியோ 4ஜி சேவை – மார்ச் வரையில் முற்றிலும் இலவசம்!

700
0
SHARE
Ad

jionew_559_102416021342புதுடெல்லி – ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜியோ 4ஜி சேவை அறிமுகமான நாள் முதல் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் 3-ம் தேதியோடு இலவச சேவை நிறைவிற்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதனை இன்னும் சில மாதங்கள் நீடித்து வரும் மார்ச் மாதம் வரையில் ஜியோ 4ஜி சேவை இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், ஜியோ பயனாளர்கள் 4ஜி சேவையை நாளொன்றுக்கு 4ஜிபி வரையில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.