Home Featured தமிழ் நாடு முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் பெர்சத்துவில் இணைந்தார்!

முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் பெர்சத்துவில் இணைந்தார்!

769
0
SHARE
Ad

abdul rashidகோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் அப்துல் ரஷித் ரஹ்மான் இன்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவில் இணைந்தார்.

இன்று புதன்கிழமை மதியம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட் தலைமை வகிக்கும் பெர்சத்து கட்சியில், அப்துல் ரஷித் உதவித் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் தகவல் வெளியிடப்பட்டது.

எனினும், இச்சந்திப்பில் அப்துல் ரஷித் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice