கோலாலம்பூர் – ஜகார்த்தா ஆளுநர் பாசுகி ஜாகாஜா பூர்னாமாவுக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமை (நவம்பர் 4 ) ஜகார்த்தாவில் போராட்டம் நடைபெறவுள்ளதால், அந்நாளில் ஜகார்த்தா செல்வதைத் தவிர்க்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தோனிசியாவிற்கான மலேசியப் பிரதிநிதி ஜாஹ்ரெயின் மொகமெட் ஹாசிம், ஜகார்த்தாவிலுள்ள மலேசியர்கள், அன்றைய நாளில் தேசிய நினைவுச் சின்னம், இஸ்டிகல் மசூதி, பாலாய்கோத்தா, தாங்கெராங் மற்றும் பெகாசி ஆகிய பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளையில், அன்றைய நாளில் ஜகார்த்தாவிற்கு வருவதைத் தவிர்க்க இயலாத மலேசியர்கள், தூதரகத்தில், இணையதளம் மூலமாகப் பதிவு செய்து கொள்ளும் படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த மேல் விவரங்களை மலேசியத் தூதரகம் மூலமாக அறிந்து கொள்ள +62 215224947 அல்லது +62 81380813036 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.