புதுடில்லி – இந்தியாவின் ஜம்மு மாநிலத்திற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான 190 கிலோமீட்டர் நீளமுள்ள அனைத்துலக எல்லையில் பாகிஸ்தானின் இராணுவத் துருப்புகள் குவிக்கப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வருகின்றது.
வழக்கமாக, பாகிஸ்தானின் எல்லை பாதுகாப்புப் படைகள்தான் இந்த அனைத்துலக எல்லையைக் காவல் காக்கும். ஆனால், தற்போது இராணுவத் துருப்புகள் இந்த எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து வருவதாகவும், எல்லைப் பாதுகாப்புப் படைகள் விலக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் தரப்பு எல்லைப் பகுதியில் இராணுவத் துருப்புகள் மற்றும் ஆயுதங்களின் குவிப்பு அதிகரித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.