Home Featured நாடு வான் அசிசா – சித்தி ஹாஸ்மா நெகிழ்ச்சியான சந்திப்பு!

வான் அசிசா – சித்தி ஹாஸ்மா நெகிழ்ச்சியான சந்திப்பு!

788
0
SHARE
Ad

wanazizah-sitihasmah1கோலாலம்பூர் – பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹாஸ்மா மொகமட் அலியும் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தனர்.

செகாம்புட்டிலுள்ள தமது இல்லத்திற்கு சித்தி ஹாஸ்மா மொகமட்டை வரவேற்ற வான் அசிசா, அவருக்கு மதிய உணவு விருதளித்தார்.

டாக்டர் சித்தி ஹாஸ்மாவுடன் முன்னாள் பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹசானும் உடன் வந்திருந்தார். இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

#TamilSchoolmychoice

கடந்த 18 ஆண்டுகளில், டாக்டர் வான் அசிசாவும், டாக்டர் சித்தி ஹாஸ்மாவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை என்று கூறப்படுகின்றது.

இச்சந்திப்பின் போது இருவரும் மனவிட்டுப் பேசியதோடு, நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.