Home Featured கலையுலகம் விஷால் நடிக்கும் “கத்தி சண்டை” முன்னோட்டம் வெளியீடு

விஷால் நடிக்கும் “கத்தி சண்டை” முன்னோட்டம் வெளியீடு

641
0
SHARE
Ad

kathi-sandai-poster

சென்னை – நடிகர் விஷாலின் அடுத்த படமான ‘கத்தி சண்டை’ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலுவின் நகைச்சுவை இந்தப் படத்தில் கலக்கலாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

போதாதற்கு, சூரியும் நகைச்சுவையில் இணைந்திருப்பதால், அவர்களின் நகைச்சுவையோடு, விஷாலின் அதிரடி சண்டைகள், தமன்னாவின் கவர்ச்சி என அனைத்தும் கலந்திருப்பதால், ‘கத்தி சண்டை’ இரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் நவம்பர் 18-ஆம் தேதி கத்தி சண்டை உலகம் எங்கும் திரையீடு காணும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: