Home Featured உலகம் பாதுகாப்பு அச்சுறுத்தல் – பேசிய மேடையிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட டிரம்ப்!

பாதுகாப்பு அச்சுறுத்தல் – பேசிய மேடையிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்தப்பட்ட டிரம்ப்!

689
0
SHARE
Ad

Trump

ரெனோ, நெவாடா – நேற்று சனிக்கிழமை பிற்பகலில் (அமெரிக்க நேரப்படி) நடைபெற்ற ஒரு பிரச்சார நிகழ்ச்சியில் குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு திடீரென ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாக அவர் பேசிய மேடையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென ‘துப்பாக்கி’ என ஆங்கிலத்தில் (gun) கத்தியதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் உடனடியாகப் பாய்ந்து டிரம்பை மேடையிலிருந்து அப்புறப்படுத்தினர். அவரது தலையை அழுத்திக் குனிய வைத்து அவரை மேடையிலிருந்து அவர்கள் கொண்டு சென்றனர்.

#TamilSchoolmychoice

பின்னர் நடத்திய தேடுதல் வேட்டையில் சந்தேக நபர் ஒருவர் அருகிலிருந்த ஒரு தனியறையில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், இருப்பினும் எந்த ஒரு ஆயுதமும் கண்டெடுக்கப்படவில்லை எனவும் பாதுகாப்புப் படையின் அறிக்கை ஒன்று பின்னர் தெரிவித்தது.

இருப்பினும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவத்தால் டிரம்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் மேடையேறிய டிரம்ப் தனது பிரச்சார உரையைத் தொடர்ந்தார்.