Home Featured வணிகம் 1எம்டிபி ஒப்பந்தங்களின் மூலம் 4 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்த இடைத் தரகர்!

1எம்டிபி ஒப்பந்தங்களின் மூலம் 4 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்த இடைத் தரகர்!

668
0
SHARE
Ad

1MDB

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் முன்னாள் பிஎஸ்ஐ வங்கியின் உயர் அதிகாரி இயோ ஜியாவெய் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையில் சாட்சியமளித்த அரசாங்கத் தரப்பு சாட்சியான சாமுவல் கோ சீ வெய் என்பவர் 1எம்டிபி சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் இடைத் தரகராக செயல்பட்டு அமெரிக்க டாலர் 4 மில்லியன் டாலருக்கும் மேல் சம்பாதித்ததாக இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் கூறினார்.

இயோ உரிமையாளராக இருந்த பிரிட்ஜ்ரோக் இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்தின் மூலம் 1.795 மில்லியன் அமெரிக்க டாலரை இரண்டு ஆண்டுகள் கால இடைவெளியில் பெற்றதாகவும் சாமுவல் கோ தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நான்காவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த சாமுவல் கோ, பால்கன் வங்கியின் (Falcon Bank) பெரும்பான்மை பங்குதாரரான அபார் இன்வெஸ்ட்மெண்ட் பிஜேஎஸ் நிறுவனத்தின் மூலம் 2.25 மில்லியனுக்கும் கூடுதலான அமெரிக்க டாலரை இடைத் தரகுப் பணமாகப் பெற்றதாகவும் கூறினார்.

பிஎஸ்ஐ வங்கியும், பால்கன் வங்கியும், 1எம்டிபி விசாரணையைத் தொடர்ந்து சிங்கை அரசாங்கத்தால் மூடப்பட்டன.

1எம்டிபி தொடர்பில் சிங்கையின் மிகப் பெரிய பண மோசடி மற்றும் பண இருட்டடிப்பு (money-laundering) தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து இயோ நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.

இது தவிர மேலும் பல குற்றச்சாட்டுகளையும், நீதிமன்ற விசாரணைகளையும் இயோ எதிர்நோக்கியுள்ளார்.